நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளையும் விசேட கூட்டமொன்றில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாளை (08.7.2026) காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக நீதியமைச்சர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண ந…

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளையும் விசேட கூட்டமொன்றில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாளை (08.7.2026) காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக நீதியமைச்சர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த போதே நீதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.அவசர உத்தரவுஇதேவேளை, நாட்டில் பொது அமைதியைப் பேணிப் பாதுகாப்பதற்காக, முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிட்ட பிரதேசங்களில் விசேட கடமைகளில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ள அவசர உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று(07) நாடாளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, 19 கைதிகள் மற்றும் 7 சிறைச்சாலை அதிகாரிகள் என மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.