புத்தளம் மாவட்டம் அனமடுவ, பரமகண்ட சந்தி அருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று அவரது மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நீண்டகால இராணுவப் பயிற்சி உயிர…
புத்தளம் மாவட்டம் அனமடுவ, பரமகண்ட சந்தி அருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று அவரது மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நீண்டகால இராணுவப் பயிற்சி உயிரிழந்தவர் அனமடுவ, உறியாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதான இராணுவ கோப்ரல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நீண்டகால இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து நேற்று வீட்டிற்கு திரும்பிய அவர், இன்று மீண்டும் கடமைக்கு செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை தனது இரு மகள்களையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்ட பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தளம் சாலையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த புத்தளம் டிப்போவுக்கு சொந்தமான SLTB பேருந்தே விபத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பேருந்தின் சாரதி
பேருந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அது மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோதலின் பின்னர் பேருந்து சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்த பின்னரே நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்ததுடன், இராணுவ கோப்ரல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மகள்களில் ஒருவர் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற வீதிப் பகுதி கடந்த சில ஆண்டுகளில் பல உயிரிழப்பு விபத்துகள் இடம்பெற்ற இடமாக காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு மேற்கொண்டு வருகின்ற நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

