வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முறையான வழித்தட அனுமதிப்பத்திரம் (Route Permit) இன்றி, சுமார் 1,000 தனியார் பேருந்துகள் நீண்டதூர சேவைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரி…
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முறையான வழித்தட அனுமதிப்பத்திரம் (Route Permit) இன்றி, சுமார் 1,000 தனியார் பேருந்துகள் நீண்டதூர சேவைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
சட்டப்பூர்வமாக அனுமதிப்பத்திரம் பெற்றுச் சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்களுக்கு இந்தச் செயல் பெரும் அநீதியை இழைப்பதுடன், பயணிகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
சில பெரிய அளவிலான தனியார் பேருந்து நிறுவனங்கள், அனுமதி பெற்ற தங்களின் பேருந்துகளைப் போன்றே ஒரே மாதிரியான வண்ண அமைப்பைப் பயன்படுத்தி, அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்துகளையும் சட்டவிரோதமாக இயக்கி வருகின்றன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இதற்கு எதிராக முறையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர் சாடியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்குத் பதிலளித்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி. ஏ. சந்திரபால பின்வருமாறு தெரிவித்துள்ளார்.குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பேருந்துகள் அனுமதிப்பத்திரமின்றி நீண்டதூரச் சேவைகளில் ஈடுபடுவதை அவர் ஏற்றுக்கொண்டார்.
எனினும், அதன் எண்ணிக்கை 1,000 ஆக உள்ளதா என்பதைத் தம்மால் உறுதிப்படுத்த முடியாது எனக் கூறினார்.
அனுமதிப்பத்திரம் வைத்துள்ள சில பேருந்துகள் கூட, தமக்குரிய நேர அட்டவணையைப் பின்பற்றாமல், அதிக இலாபம் தரும் நேரங்களில் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.அனுமதிப்பத்திரமின்றி இயங்கும் பேருந்துகள் மற்றும் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி இயங்கும் பேருந்துகள் ஆகிய இரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆணைக்குழு தற்போது திட்டமிட்டு வருகின்றது.

