நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவுகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பில், ஜனநாயக மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு தலைமையகத்திற்குச் சென்று ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை சந்தி…

நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவுகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பில், ஜனநாயக மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு தலைமையகத்திற்குச் சென்று ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை சந்தித்து  மனு ஒன்றைக் கையளித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தலதா அத்துகோரள, பிரேமநாத் சி. தொலவத்த, அசாத் சாலி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.சமத்துவக் கோட்பாடுஇந்த சந்திப்பினை அடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,

இலங்கையில் எவரும் இவ்வாறான மாற்றத்தைக் கோரவில்லை. சட்டத்தரணிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

எந்தவொரு வெளிப்படைத்தன்மையுமின்றி அரசு முன்னெடுக்கும் இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன?மேலும், “அரசமைப்பின் 12(1) பிரிவின் கீழ் வரும் சமத்துவக் கோட்பாட்டுக்கு முரணாக, நீதிபதிகளுக்கும் சட்டத்தரணிகளுக்கும் பதவிக்காலத்தை நீடிக்க அரசு முனைகின்றது.

நாட்டில் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காது, வீணான குழப்பங்களை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைநீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சுரேன் ராகவன்,

சம்பவம் நடந்து 10 நாள்கள் கடந்தும், இதுவரை இடைக்கால அறிக்கை கூட வெளியிடப்படவில்லை.இது துரதிர்ஷ்டவசமானது.கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்கள் போன்ற குறைந்தபட்ச பலப்பிரயோக முறைகளைக் கையாண்டிருக்க வேண்டும். இந்த வன்முறையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டனை வழங்கப்படாத நிலையில், இவர்களின் ‘வாழும் உரிமை’ பறிக்கப்பட்டுள்ளது. இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

முறைமை மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்தனர். ஆனால் அனுபவமற்ற நிர்வாகமே தற்போதைய நாட்டின் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

ஜனநாயகக் கட்டமைப்புக்குள் நின்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு ‘இதுவே போதும்’ என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.