நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு 'தடைக்கல்லாக' (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாக பிரித்தானியாவைச் சேர்ந்த ராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்…

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு 'தடைக்கல்லாக' (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாக பிரித்தானியாவைச் சேர்ந்த ராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.

பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து இவை இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் பலவீனமடைந்துள்ள நிலையில், மூன்றாவது தரப்பாக வந்த தேசிய மக்கள் சக்தி (NPP) ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்வது பழைய அரசியல் சக்திகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்கு முதன்மையான காரணமாக, சிறைக்குள் தமது 'குட்டி ராஜ்ஜியத்தை' நடத்தி வந்த கும்பலுக்கும், அவர்களை கண்காணித்த உளவுப் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என்று குறிப்பட்டார்.

சிறை வன்முறையைத் தொடர்ந்து நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக பலவீனமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க முயற்சிக்கின்றனர்.

ஜூலை மாதத்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீதான வழக்குகள் வரவுள்ள நிலையில், சிறைக் கலவரம் இச்செய்திகளை மழுங்கடிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

இந்த வன்முறையானது நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, முதலீடுகளைத் தடுத்து, தற்போதைய அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் நோக்கம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...