அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பொறியியலாளர் எஸ்.என்.பீ.எம். பத்மசிறி நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய ஏ. விஜேசிங்ஹ, கடந்த ஜூலை 9ஆம் திகதி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற…

அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பொறியியலாளர் எஸ்.என்.பீ.எம். பத்மசிறி நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய ஏ. விஜேசிங்ஹ, கடந்த ஜூலை 9ஆம் திகதி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து இந்தப் பதவி வெற்றிடமாக இருந்தது.

தற்போது அத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வரும் இலங்கை பொறியியல் சேவையின் விசேட தர அதிகாரியான பொறியியலாளர் எஸ்.என்.பீ.எம். பத்மசிறி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

இதற்கான யோசனையை வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.