அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் நினைவூட்டல்! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன இறந்து கிடந்த…

அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் நினைவூட்டல்!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன இறந்து கிடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்துகள் தொடர்பான அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், மரணமடைந்தவர் இறந்து கிடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சில அடையாளம் தெரியாத மருந்துகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்கு மேலதிகமாக, மரணமடைந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதற்கமைய, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, குறித்த மருந்துகள் தொடர்பான அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து, அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்புமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரி கொழும்பு சட்டவைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்புமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக வழக்கை ஜூலை மாதம் 22 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.