தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகின்றதா என முன்னாள் ஆளுனரும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படடி்ருந்த போதிலும் அவர்கள் எவரும் தற்போதைய…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகின்றதா என முன்னாள் ஆளுனரும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படடி்ருந்த போதிலும் அவர்கள் எவரும் தற்போதைய ஜனாதிபதியைப் போல் நீதியரசர் பதவி வெற்றிடங்களை பேணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் தலா 4 நீதியரசர் பதவிகள் வீதம் பற்றாக்குறை நிலவுகிறது. என தெரிவித்துள்ளார். இதனால் கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்குரிய பதவி உயர்வுகளைப் பெற்றுச் செல்வதற்காகக் காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் இன்னார்தான் சிறைக்குச் செல்வார், பால்சோறு சாப்பிடுவதற்குத் தயாராகுங்கள் என்று ஜனாதிபதி பகிரங்க மேடைகளில் கூறி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கீழ் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு லஞ்சமாக வழங்குவதற்காகவே இந்த உயர் பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளனவா என்ற பலத்த சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் இத்தகைய நிலைமையைக் காணும்போது தனக்கு கடுமையான அருவருப்பு ஏற்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.