அஸ்வெசும நலன்புரித் திட்டம் பெறுபவர்களுக்கான அவசர அறிவிப்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெறும் பயனாளர்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகப் பதிவாக…

அஸ்வெசும நலன்புரித் திட்டம் பெறுபவர்களுக்கான அவசர அறிவிப்பு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெறும் பயனாளர்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகப் பதிவாகியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பயனாளர்களுக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு, தாங்கள் அஸ்வெசும சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் எனப் போலியாக அறிமுகப்படுத்தி, தகவல்களைப் பெற்று பண மோசடியில் ஈடுபடுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த மோசடிச் செயல்களுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனச் சபை வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான போலியான அழைப்புகள் மற்றும் மோசடி முயற்சிகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.