இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் ரூ. 351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் அறிக…

இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் ரூ. 351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவை சதவீத அடிப்படையில் இது சுமார் 54 சதவிகித அதிகரிப்பு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின் பொருளாதார பணவீக்கம் 2024 ஆம் ஆண்டில், நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 660 பில்லியனாக இருந்துள்ளதாக பேராசிரியர் கூறியுள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, வர்த்தக வங்கிகளிடம் நகைகளை அடமானம் வைத்துப் பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 101.1 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

அன்றாட பணத்தேவை அதிகரிப்பிற்கு நாட்டின் பொருளாதார பணவீக்கமே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நகைகளை அடமானம் வைத்தல் அல்லது விற்பனை செய்தல் காரணமாக நாட்டின் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள் இல்லாமல் போய்விட்டதாக நிதி நிறுவன அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.வாகனங்கள் விற்பனை

பொருளாதார பணவீக்கம் மற்றும் உயர்ந்த வாழ்க்கைச்செலவு காரணமாக, ஏராளமான இலங்கையர்கள் தங்களது தங்க நகைகளை விற்பனை செய்யவும் அடகு வைக்கவும் நாடியுள்ளனர். நாட்டில் விற்கப்பட்ட தங்கத்தின் சரியான அளவு (கிலோகிராம் அல்லது பவுண்டுகளில்) குறித்து மத்திய வங்கியோ அல்லது அரசாங்கமோ அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும், பொருளாதார நெருக்கடியின் போது தங்க அடகு 356 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய சந்தை மற்றும் ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக, நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இதற்கிடையில், பொருளாதாரப் பணவீக்கத்தின் காரணமாக, பல்வேறு வகையான கிட்டத்தட்ட பத்து இலட்சம் வாகனங்கள் பல்வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டுள்ளதையும் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.