அதிகாரம் கையில் இருக்கும்போது சுயாதீனமான நீதிமன்றம், சுதந்திரமான சட்டத்தரணிகள் தொழில் அல்லது சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவம் சில நேரங்களில் நமக்கு புலப்படாமல் போகலாம். எனினும், காலப்போக்கில் சூழ்நிலைகள் மாறும்போது, ஒரு ஜனநாயக ஆட்சியை பாதுகாக்கும் பிரதான நிறுவனங்கள் அவைதான் எ…
அதிகாரம் கையில் இருக்கும்போது சுயாதீனமான நீதிமன்றம், சுதந்திரமான சட்டத்தரணிகள் தொழில் அல்லது சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவம் சில நேரங்களில் நமக்கு புலப்படாமல் போகலாம். எனினும், காலப்போக்கில் சூழ்நிலைகள் மாறும்போது, ஒரு ஜனநாயக ஆட்சியை பாதுகாக்கும் பிரதான நிறுவனங்கள் அவைதான் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நீதித்துறை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்து அவர் தெரிவித்த கருத்துக்கள்,ஒரு சட்டத்தரணியின் பொறுப்பு, சட்டத்தின் முன்னால் ஒவ்வொரு நபருக்கும் அச்சமின்றி, சுதந்திரமாக மற்றும் நியாயமான முறையில் சட்ட பிரதிநிதித்துவத்தை வழங்குவதாகும். மக்களின் விமர்சனத்திற்கு உள்ளான நபர்களுக்காக முன்னிலையாகும் சட்டத்தரணிகளைக் கண்டிக்க முற்படுவது, இறுதியில் நீதித்துறையின் அத்திபாரத்தை பலவீனப்படுத்துவதாகும். சட்டத்தின் ஆட்சி யாருக்கு தேவைஅதிகாரம் நிரந்தரமானது அல்ல. பதவிகள் நிரந்தரமானவை அல்ல. இன்று அரசாங்கமாக இருப்பது நாளை எதிர்க்கட்சியாக மாறலாம். இன்று குற்றம் சுமத்துபவர் நாளை குற்றம் சுமத்தப்படுபவராக மாறலாம். இன்று உங்களது எதிரியாக இருப்பவர், நாளை உங்களுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகும் சட்டத்தரணியாக மாறலாம். எனவே, ஒரு சுதந்திரமான சட்டத்தரணிகள் தொழில், சுயாதீனமான நீதிமன்றம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது என்பது சட்டத்தரணிகளுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ செய்யும் ஒரு சலுகை அல்ல. அது ஒவ்வொரு குடிமகனினதும் சுதந்திரம், உரிமைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பாகும். அந்த நிறுவனங்களை நாம் பாதுகாக்க வேண்டியது, இன்று அவற்றின் பாதுகாப்பு யாருக்குத் தேவைப்படுகிறது என்று பார்த்தல்ல. நாளை ஒரு நாளில் அவற்றின் பாதுகாப்பு நமக்கே தேவைப்படலாம் என்பதை நாம் அறிந்திருப்பதனாலாகும். சட்டத்தின் ஆட்சி என்பது பலசாலிகளின் வரப்பிரசாதம் அல்ல. அது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்கும் இறுதி அரணாகும். அந்தப் பாதுகாப்பு உங்களுக்கு எப்போது தேவைப்படும் என்பதை யாரும் அறியார்.

