தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்தமை மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் செயலில் ஈடுபட முயன்றமை தொடர்பாக அதிகாரிக்கு எத…

தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்தமை மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் செயலில் ஈடுபட முயன்றமை தொடர்பாக அதிகாரிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புலத்சிங்கள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு அமைவாக, மதுகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட புலத்சிங்கள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை  இந்த மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் புத்திக மல்வத்த உத்தரவிட்டுள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருமாறு பொறுப்பதிகாரி பணித்துள்ளார் என்பது நீதிமன்ற விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. ஏதோ ஒரு அவசரத் தேவைக்காகவே தங்களை அழைப்பதாக நினைத்து முறைப்பாட்டாளரான பொலிஸ் உத்தியோகத்தர் அந்த உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற போதே அவர் இந்த பாலியல் அத்துமீறல் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.