கொடகம – பொரளை பிரதான வீதியின் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே இன்று (17) அதிகாலை இடம்பெற்ற சாலை விபத்தில் பயணிகள் பஸ் ஒன்றும் டிப்பர் ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதிகாலை சுமார் 4.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தையடுத்து அந்தப் ப…

கொடகம – பொரளை பிரதான வீதியின் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே இன்று (17) அதிகாலை இடம்பெற்ற சாலை விபத்தில் பயணிகள் பஸ் ஒன்றும் டிப்பர் ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதிகாலை சுமார் 4.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தையடுத்து அந்தப் பிரதான வீதியில் போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான சுமார் 20 பேர் ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த பஸ் சாரதி வாகனத்திற்குள் சிக்கிய நிலையில் இருந்ததாகவும், ஒரு மணித்தியாலத்திற்கும் மேலான மீட்புப் பணிக்குப் பிறகு அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 45ஆம் இலக்க வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தால் பஸ் மற்றும் டிப்பர் வாகனம் இரண்டிற்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.