உகாண்டா நாட்டில் கரிக்காக பாரம்பரிய மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள ஒரு பெண்மணி வீணாகும் கழிவுகளைக் கொண்டு தூய்மையான எரிசக்தியை உருவாக்கிப் புரட்சி செய்து வருகிறார். உகாண்டாவின் வடக்குப் பகுதியில் கரிக்காக ஷியா மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு கவலையடைந்த ல…

உகாண்டா நாட்டில் கரிக்காக பாரம்பரிய மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள ஒரு பெண்மணி வீணாகும் கழிவுகளைக் கொண்டு தூய்மையான எரிசக்தியை உருவாக்கிப் புரட்சி செய்து வருகிறார்.

உகாண்டாவின் வடக்குப் பகுதியில் கரிக்காக ஷியா மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு கவலையடைந்த லூசி எவர்லின் ஆட்டிம் என்ற காலநிலை ஆர்வலர், இதற்கு மாற்றாக ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு அவர் தொடங்கிய 'மொயாவோ ஆப்பிரிக்கா முன்முயற்சி' என்ற சமூக நிறுவனம், வீணாகத் தூக்கி எறியப்படும் ஷியா பழங்களின் உமிகளைக் கொண்டு சமையல் எரிபொருள் கட்டிகளை தயாரித்து வருகிறது.பசுமை ஆற்றல் உகாண்டாவில் சுமார் 90 சதவீத வீடுகள் சமையலுக்குக் கரியையே நம்பியிருப்பதால், ஆண்டுதோறும் 1,22,000 ஹெக்டேயளர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

லூசியின் இந்தத் திட்டம் காடுகளைப் பாதுகாப்பதோடு மட்டுமன்றி, 1,200க்கும் மேற்பட்ட கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் தற்சார்பையும் வழங்கியுள்ளது.

இந்த அமைப்பின் மூலம் பயிற்சி பெற்ற பெண்கள், ஷியா உமிகளைச் சேகரித்து, அவற்றை இடித்து, களிமண் மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவுடன் கலந்து எரியூட்டும் கட்டிகளாக மாற்றித் தங்களின் சமையல் தேவைகளுக்கும் பயன்படுத்தி, விற்பனையும் செய்து வருகின்றனர்.

காடுகளைப் பாதுகாப்பதுடன், கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் இந்த சுற்றுச்சூழல் நட்பு முயற்சிக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.