தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் போராட்டங்கள் எதுவுமின்றி அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டன. என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி வித்யாலயத்தில் நேற்று(15.07.2026) இடம்பெற்ற வகுப்பறை கட்டிடத்தொகுதி திறப்பு விழாவில் கல…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் போராட்டங்கள் எதுவுமின்றி அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டன. என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி வித்யாலயத்தில் நேற்று(15.07.2026) இடம்பெற்ற வகுப்பறை கட்டிடத்தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.சம்பள உயர்வுகள் அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த ஆண்டு கல்விக்காக அதிக நிதியொதுக்கீடுகள் செய்யப்படும். ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வுகள் வழங்கப்படவுள்ளன. முன்னைய காலங்களில் சம்பள உயர்வு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் போராட்டங்கள் எதுவுமின்றி சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டன. மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கும் முற்றுப்புள்ளி வைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.கிளிநொச்சி ஐயனார்புரம் அ.த.க பாடசாலையில் 31மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ராஜீவன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், கிளிநொச்சி - தெற்கு வலயக் கல்வி பணிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

