எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் (QR) முறையை உடனடியாக நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையின்மையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமரகே…

எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் (QR) முறையை உடனடியாக நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையின்மையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார். கியூஆர் முறைமை அவர் மேலும் தெரிவிக்கையில்,

கியூஆர் முறையின் பயன்பாடு எரிபொருள் மற்றும் டொலர் கையிருப்பு இரண்டையும் கட்டுப்படுத்தும் நிலையில், போர்ச் சூழல் மீண்டும் மோசமடைந்தால் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையைத் தடுக்கவும் உதவியாக இருக்கும்.

மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவும் கியூஆர் முறைமை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளது.

மேலும், போர்ச் சூழல் மீண்டும் உருவானதால் நாட்டின் எரிபொருள் விநியோக வலையமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும், எரிபொருள் விலையில் மீண்டும் உயர்வு ஏற்படுமா என்பதை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.