இந்திய திரையிசை உலகின் 'இசைக்குயில்' என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 88ஆவது வயதில் கர்நாடக மாநிலம் மைசூருவில் காலமானார்.அவரது மறைவு இந்திய இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ். ஜானகியின் மறைவைத் தொடர்ந்து த…

இந்திய திரையிசை உலகின் 'இசைக்குயில்' என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 88ஆவது வயதில் கர்நாடக மாநிலம் மைசூருவில் காலமானார்.அவரது மறைவு இந்திய இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ். ஜானகியின் மறைவைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ். ஜானகி. பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இந்திய இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ். ஜானகியின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.