இலஞ்சம், ஊழல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை தண்டிப்பதற்கு பிரதம நீதியரசர் பதவியில் தொடர்ந்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி விரும்புவதாக தெரிய வந்துள்ளது. ஜனாதிபதிக்கு நெருக்கமான தேசிய மக்கள் சக்தியின் முக்கிய சட்டத்தரணிகள் அண்…

இலஞ்சம், ஊழல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை தண்டிப்பதற்கு பிரதம நீதியரசர் பதவியில் தொடர்ந்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதிக்கு நெருக்கமான தேசிய மக்கள் சக்தியின் முக்கிய சட்டத்தரணிகள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியபோது இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.ஜனாதிபதி வலியுறுத்தல் அதன்போது பிரதம நீதியரசருக்கு இன்னும் இரண்டு வருடங்கள் பதவி நீடிப்பு வழங்க ஜனாதிபதி அனுரகுமார மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மேற்கொண்டு வரும் முயற்சி குறித்து தேசிய மக்கள் சக்தியின் முக்கிய சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எனினும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் தவறுகளுக்குத் தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பதாயின் அதற்கு பிரதம நீதியரசர் தொடர்ந்தும் பதவியில் நீடித்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அவ்வாறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தண்டிக்கப்படாது போனால் அடுத்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுத் தளம் குறைந்துவிடும் என்பதும் ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 11 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.