எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் அல்லது ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக ஒரு வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் அல்லது ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக ஒரு வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமிந்த குலரத்னவின் சேவை இடைநீக்கம் அதன்பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த மாதம் 27ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்து பூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.முந்தைய அரசாங்கத்தின் போது, சமிந்த குலரத்னவை நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமாக நியமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரு உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
அந்த நியமனம் தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கும், அது குறித்த மேலதிக தகவல்களைப் பெறுவதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமிந்த குலரத்னவின் சேவை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

