2026ஆம் ஆண்டுக்கான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை முன்னிட்டு, கேரளம் முழுவதும் நாளை (20) ஒருநாள் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கேரள முதல்வர் வீ.டி. சதீசன் உத்தரவிட்டுள்ளார்.தற்போதைய சாம்பியனான ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் வரலா…

2026ஆம் ஆண்டுக்கான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை முன்னிட்டு, கேரளம் முழுவதும் நாளை (20) ஒருநாள் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கேரள முதல்வர் வீ.டி. சதீசன் உத்தரவிட்டுள்ளார்.தற்போதைய சாம்பியனான ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப்போட்டி, இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்போட்டியைக் காண தற்போது இந்தியாவிலேயே கால்பந்து இரசிகர்களின் சொர்க்கமாகத் திகழும் கேரள மாநிலம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.இரசிகர்களின் உற்சாகத்தைக் கொண்டாடும் விதமாகவும், நள்ளிரவில் போட்டி நடப்பதைக் கருத்தில் கொண்டும் இந்த விடுமுறை அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதனால் கேரள கால்பந்து இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.