ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரான் மீது தொடர்ந்து 10-வது இரவாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, குவைத், ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ந…
ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரான் மீது தொடர்ந்து 10-வது இரவாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, குவைத், ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க நலன்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் இராணுவ திறன்களை பலவீனப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் முழுமையான போராக மாறும் அபாயம் நிலவி வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகளும் தொடர்கின்றன. இதன் ஒரு பகுதியாக, ஈரானின் உள்துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக கையெழுத்திடப்பட்டிருந்த இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்துள்ள நிலையில், உலகின் முக்கிய எரிசக்தி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மோதல் தீவிரமடைந்துள்ளதால், இரு தரப்பினரும் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச கவலைகள் எழுந்துள்ளன.

