ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள ஹட்டன் பொதுச் சந்தைப் பகுதியில், பாதசாரிகளுக்கு இடையூறாகக் கடைகளுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் அடுக்குகளை அகற்றும் நடவடிக்கையின் போது, நகர சபை அதிகாரிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையே கடுமையான வ…
ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள ஹட்டன் பொதுச் சந்தைப் பகுதியில், பாதசாரிகளுக்கு இடையூறாகக் கடைகளுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் அடுக்குகளை அகற்றும் நடவடிக்கையின் போது, நகர சபை அதிகாரிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் பதற்றமான சூழல் திங்கட்கிழமை (20) நிலவியது.
சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுமாறு ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் வருவாய் நிர்வாகி உள்ளிட்ட அதிகாரிகள் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர். இருப்பினும், பாதசாரிகளின் நடைபாதையை மறித்து வர்த்தகர்கள் தமது விற்பனையைத் தொடர்ந்ததால், நகர சபை அதிகாரிகள் மேற்படி கட்டுமானங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது, சந்தை வர்த்தகர்கள் ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, அகற்றும் நடவடிக்கைக்கு எதிராகத் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
ஹட்டன் நகரில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டுமானங்களையும் அகற்றுமாறும், குறிப்பிட்ட ஒரு வர்த்தகப் பிரிவினரை மட்டும் இலக்கு வைத்து இவ்வாறு கட்டுமானங்களை அகற்றுவது முறையற்றது மற்றும் அநீதியானது என்றும் வர்த்தகர்கள் இதன்போது குற்றம் சாட்டினர்.

