ஹட்டன் நகர மத்திய பகுதியில் வியாழக்கிழமை (16) காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹட்டன் நகர மத்தியில் உள்ள பாதசாரிகள் கடவைக்கு (வெள்ளைக்கோடு) அருகில், மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்…

ஹட்டன் நகர மத்திய பகுதியில் வியாழக்கிழமை (16) காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹட்டன் நகர மத்தியில் உள்ள பாதசாரிகள் கடவைக்கு (வெள்ளைக்கோடு) அருகில், மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிளைத் தவறான திசையில் முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வேகத்தில், எவ்வித உதவியும் செய்யாமல் குறித்த முச்சக்கரவண்டி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.