ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட வேளையில் தொழிற்சாலையில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகவ…
ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட வேளையில் தொழிற்சாலையில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்களில் சிலர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புப் பிரிவினரின் தீவிர முயற்சியால் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தொழிற்சாலைக்குள் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

