ஹோமகம - பிட்டிபான, கலகஹேன பகுதியில் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று(16.07.2026) இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்பு கலகஹேன பகுதியில் கால்வாய் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத…
ஹோமகம - பிட்டிபான, கலகஹேன பகுதியில் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(16.07.2026) இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்பு கலகஹேன பகுதியில் கால்வாய் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இதன்போது, உயிரிழந்த இளைஞரின் ஒரு ஜோடி காலணியொன்றும், 20 ரூபாய் நோட்டும் நிலத்திலிருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கால்வாயில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சடலம் விலங்குகளால் சிதைக்கப்பட்ட நிலையில், முகம் அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனதாக முறைப்பாடு
இதற்கிடையில், ஹோமகம, கடனவத்த, பிட்டிபான, சமகி மாவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று இரவு(15.07.2026) முதல் காணாமல் போனதாக மீகோட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டில் உள்ள தகவல்களும், கொலை செய்யப்பட்ட நபரின் தகவல்களும் ஒத்திருப்பதாக ஹோமகம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காணாமல் போனவர் ஒரு ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் என்றும், அவர் பகுதி நேர செயலி டாக்சி சாரதியாகப் பணியாற்றி வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் குறித்த இளைஞர், மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் ஹோமகம பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

