அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள போரினால், உலகளவில் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜூலை 7ஆம் திகதிக்குப் பிறகு, 10,000 டன் எடையுள்ள எந்தவொரு பெரிய கப்பலும் அமெரிக்…

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள போரினால், உலகளவில் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஜூலை 7ஆம் திகதிக்குப் பிறகு, 10,000 டன் எடையுள்ள எந்தவொரு பெரிய கப்பலும் அமெரிக்கா ஒருங்கிணைத்த பாதுகாப்பான கடல்வழிப் பாதை வழியாகச் செல்லவில்லை என்றும், ஓமன் நாட்டை ஒட்டிய கடல்வழிப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடல்வழிப்போக்குவரத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் ட்ரம்ப்

கடந்த பெப்ரவரி மாதம் இந்த போர் தொடங்குவதற்கு முன்பு, நாளொன்றுக்கு சராசரியாக 130 கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை வெறும் 5 கப்பல்கள் மட்டுமே பாதையைக் கடந்துள்ளன. அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத், கத்தார், ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த கடுமையான போர்ச் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகச் சங்கிலி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களின் பாதிப்பால் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

டீசல் விலை அதிகரிப்பு தற்போதைய சூழலில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பெரலுக்கு 76.58 டொலர் என்ற அளவில் நிலையாக நீடித்தாலும், எதிர்வரும் கோடைக் காலத்தில் எண்ணெய் இருப்பு குறைவதால் இதன் விலை பெரலுக்கு 10 முதல் 15 டொலர்கள் வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த பதற்றமான சூழலிலும், ஆசியப் பங்குச் சந்தைகளான ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹொங்கொங் சந்தைகள் இன்று இலாபத்துடன் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.