வளைகுடாவில் மீண்டுல் தொடரும் தாக்குதல்களினால் மறு அறிவித்தல் வரும் வரை ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்தக் கூடாது என கப்பல் போக்குவரத்துக்கான தலைமை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் மோதல்களால், ஹோர்ம…
வளைகுடாவில் மீண்டுல் தொடரும் தாக்குதல்களினால் மறு அறிவித்தல் வரும் வரை ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்தக் கூடாது என கப்பல் போக்குவரத்துக்கான தலைமை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் மோதல்களால், ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த நீர்வழிப் பாதை தற்போது வணிகக் கப்பல்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கவுள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு எச்சரித்துள்ளது.
பாரசீக வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், அவசர காலங்களில் MMDAC மற்றும் IFC-IOR ஆகிய அமைப்புகளைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில், ஓமன் கடற்பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் புனேவைச் சேர்ந்த ஹெராம் கர்மார்கர் உட்பட இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் மாலுமிகளை வழங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிலிப்பைன்ஸ் நாடு இத்தகைய தடையை விதித்துள்ள நிலையில், தற்போது இந்தியாவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

