மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றநிலையால், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குவைத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரானின் தாக்குதல் நடவடிக்கைகள் க…
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றநிலையால், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குவைத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரானின் தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும்பாலான விமானங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்காலிகமாக நிறுத்தம்
அரசு செய்தி நிறுவனமான KUNA வெளியிட்ட தகவலின்படி,
"குவைத் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் தரையிறக்க நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், பெரும்பாலான விமானங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் தங்களது விமான நிலையை தொடர்ந்து சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என குவைத் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பிராந்திய நாடுகள் மீது பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டுள்ள சூழலில் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான குவைத் மீதும் அச்சுறுத்தல் நிலவி வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாதம், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்து நீடித்த அமைதி ஒப்பந்தத்தை நோக்கி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்த போதிலும், தற்போது மீண்டும் இரு தரப்புக்கும் இடையே பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

