அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் பல்வேறு இராணுவ இலக்குகள் மீது ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது. சமூக ஊடக தளமான எக்ஸ் (X) வழியாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கண்காணிப்பு மை…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் பல்வேறு இராணுவ இலக்குகள் மீது ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
சமூக ஊடக தளமான எக்ஸ் (X) வழியாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கண்காணிப்பு மையங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் இராணுவ திறன்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் பிராந்திய கூட்டாளிகளை இலக்காகக் கொண்டு பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஈரானில் இருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தமது வான் பாதுகாப்புப் படைகள் முறியடித்ததாக குவைத் இராணுவம் அறிவித்துள்ளது.
இதேபோன்று, ஒரே இரவில் தமது வான்பரப்பை நோக்கி ஏவப்பட்ட 10 ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ஜோர்தான் இராணுவமும் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் நாட்டில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, இந்தத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைகள் போர் விமானங்கள், ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு இராணுவ வளங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

