தென் ஈரானில் உள்ள கடற்கரை இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு, அமெரிக்கப் படைகள் பகல் நேரத்திலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அலுவலகம் அறிவித்துள்ளது.90 நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள மிக…

தென் ஈரானில் உள்ள கடற்கரை இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு, அமெரிக்கப் படைகள் பகல் நேரத்திலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அலுவலகம் அறிவித்துள்ளது.90 நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள மிக முக்கியமான கிரேட்டர் துன்ப் தீவில் உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பொதுவாக இரவு நேரங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா, தற்போது தனது தாக்குதல் வேகத்தை அதிகரித்து பகல் நேரத்திலும் குண்டுமழையைப் பொழிந்து வருகிறது.எச்சரிக்கை மறுபுறம், தென் ஈரானில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 260-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் முக்கியக் குடிமைசார் உள்கட்டமைப்புகளை அடுத்த வாரத்தில் குறிவைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் எச்சரித்துள்ளார். இது உலக அளவில் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்ற பெரும் கவலையை உலக நாடுகளிடையே எழுப்பியுள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றிற்கு இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.