ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கலந்து கொண்டது சமூக ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இறுதி அஞ்சலி நிகழ்வின் போது, கருப்பு நிற முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்த ஒருவர் முன்வரிசைய…

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கலந்து கொண்டது சமூக ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இறுதி அஞ்சலி நிகழ்வின் போது, கருப்பு நிற முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்த ஒருவர் முன்வரிசையில் அமர்ந்திருந்த காட்சி வெளியாகியதைத் தொடர்ந்து, அவர் கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி என பலரும் தங்களது யூகங்களை தெரிவித்திருந்தனர். இறுதிச்சடங்குஅலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, மொஜ்தபா கமேனி அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடும் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக முகமூடி அணிந்து வந்ததாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியானது.

எனினும், இந்த சர்ச்சைக்கு ஈரானிய ஊடகங்கள் விளக்கம் அளித்துள்ளன. அதன்படி, முகமூடி அணிந்திருந்தவர் மொஜ்தபா கமேனியின் மகன் முகமது ஜாவத் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலில், முகமது ஜாவத் முகத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.சர்ச்சைக்கு விளக்கம்

அதனால் சிகிச்சை பெற்று வரும் அவர், தனது காயங்களை மறைப்பதற்காகவே முகமூடி அணிந்திருந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அந்த தாக்குதல் நடைபெற்றபோது மொஜ்தபா கமேனி தனது தந்தையுடன் அதே வளாகத்தில் இருந்தாலும், வேறு அறையில் இருந்த காரணத்தால் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மொஜ்தபாவுக்கு முகம், கைகள், கால்கள் மற்றும் தோள்பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்தச் செய்திகள் குறிப்பிடுகின்றன.