ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதிகரித்துள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ஏற்கனவே ஈரானில் இருக்கும் இந்தியர்கள், அங்கு கிடைக்கக்கூடிய விமா…

ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதிகரித்துள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், ஏற்கனவே ஈரானில் இருக்கும் இந்தியர்கள், அங்கு கிடைக்கக்கூடிய விமானச் சேவைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் "வெடித்துச் சிதறி" முடக்கப்பட்டதாக ஈரான் அறிவித்ததை அடுத்து, அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.தாக்குதல்கள் இதன் பின்னணியில், திங்கட்கிழமை அன்று அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஒரு மாதத்திற்கு முன்பு கையெழுத்தான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்குவகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான இந்த மோதல், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.