ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா இன்று (08) அதிகாலை பாரிய வான் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பந்தர் அப்பாஸ் மற்றும் கார்க் தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வான் பாதுகாப்பு அ…

ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா இன்று (08) அதிகாலை பாரிய வான் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பந்தர் அப்பாஸ் மற்றும் கார்க் தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் மையங்கள், ஏவுகணை தளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் பிற இராணுவ வசதிகள் என 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல், ஓமன் வளைகுடா பகுதியில் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து சென்ற மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் ஏற்கனவே பதற்றமான நிலையில் காணப்பட்ட நிலையில், இந்த புதிய இராணுவ நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன.

தாக்குதலுக்குப் பின்னர் ஹோர்மூஸ் நீரிணையை ஒட்டிய பிராந்தியத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச எரிசக்தி விநியோகம் மற்றும் கடல்சார் வர்த்தகத்திலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.