ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் இன்று (08) கிட்டத்தட்ட 6% அதிகரிப்பை பதிவுசெய்துள்ளன. இது மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் என்ற அச்சத்தையும், எண்ணெய் விநியோகத்தில் தட…

ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் இன்று (08) கிட்டத்தட்ட 6% அதிகரிப்பை பதிவுசெய்துள்ளன.

இது மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் என்ற அச்சத்தையும், எண்ணெய் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 5.95% உயர்ந்து ஒரு பேரலுக்கு 78.50 அமெரிக்க டொலராகவும், அமெரிக்க (WTI) கச்சா எண்ணெய் விலை 5.95% உயர்ந்து ஒரு பேரலுக்கு 74.60 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.