ஈரானுடன் கடந்த மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்றிலுமாக முறிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சி மாநாட்டின் போது, பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கு…

ஈரானுடன் கடந்த மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்றிலுமாக முறிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சி மாநாட்டின் போது, பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே டிரம்ப் இந்த அதிரடி கருத்துக்களைத் தெரிவித்தார்.

என்னைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய தலைவர்களை பொய் சொல்பவர்கள் என்றும், வன்முறை எண்ணம் கொண்டவர்கள் என்றும் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர்களிடம் அணுஆயுதம் இருந்தால் கண்டிப்பாக அதனைப் பயன்படுத்தி இருப்பார்கள்" என அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

நாங்கள் ஒப்பந்தம் செய்து, அணுஆயுதம் கூடாது என அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அவர்கள் வெளியே சென்று பத்திரிகையாளர்களிடம் 'நாங்கள் அதுபற்றிப் பேசவே இல்லை என கூறுகின்றார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானியர்களின் மனநிலையில் கோளாறு உள்ளது எனவும் பேச்சுவார்த்தை நடத்துவது நேர விரயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான சமாதான பேச்சுவார்த்தை வீண் வேலை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.