நீர்கொழும்பில் இரண்டு தினங்களாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்நிலையில் தமது பிள்ளைகளை எந்தவித குற்றச்செயலில் ஈடுபடாத போதும் வலுக்கட்டாய பிடித்து வந்து சிறையில் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சுமத்த…
நீர்கொழும்பில் இரண்டு தினங்களாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
இந்நிலையில் தமது பிள்ளைகளை எந்தவித குற்றச்செயலில் ஈடுபடாத போதும் வலுக்கட்டாய பிடித்து வந்து சிறையில் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகளின் குடும்பத்தினர் சிறைச்சாலையின் முன் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்ணீருடன் கதறும் தாய் “எனது மகனின் முகத்தைப் பார்க்க அனுமதியுங்கள் என அங்கு வந்துள்ள கைதிகளின் தாய் ஒருவர் கதறியழுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மகனுக்கு என்ன ஆனது என நான் பார்க்க வேண்டும். சாதாரணமாக வீட்டில் இருந்த மகனை தூக்கி வந்து சிறையில் அடைத்து விட்டார்கள்.
இங்கே இருக்கும் அனைத்து இளைஞர்களும் போதைப்பொருள் பாவிப்பவர்கள் அல்ல, அப்பாவிப் பிள்ளைகளுக்கு இந்த அநீதியைச் செய்யாதீர்கள் என அவர் கதறியுள்ளார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, சிறைச்சாலைக்கு முன்னால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்கள் குறித்துத் தகவல்களை அறிவதற்காக வந்திருந்த தாய்மார்கள் குழுவில் இருந்த தாய் ஒருவர், கதறி அழுது தனது வேதனையை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

