பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் பிரதேசத்தில் காதலியுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை பேஸ்புக் மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். காதலியான இளம் பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட…
பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் பிரதேசத்தில் காதலியுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை பேஸ்புக் மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். காதலியான இளம் பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோனாபினிவல பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள 22 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் தொடர்புஅலுபோமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் குறித்த இளம் பெண், சந்தேக நபருடன் சுமார் மூன்று ஆண்டுகள் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.அப்போது தமக்கிடையேயான தகாத காட்சிகள் அடங்கிய வீடியோவை, சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி தன்னுடைய பெயரில் இருந்த போலியான பேஸ்புக் கணக்கு மூலம் தனது தோழிக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த முறைப்பாட்டை மீளப் பெறுமாறும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட வீடியோவை முழுமையாக சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் எனவும் கான்ஸ்டபிள் தமக்குத் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாகப் பெண் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரான கான்ஸ்டபிள் பொலிஸ் நிலையத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினரிடமிருந்தும் விசாரித்து தகவல்கள் பெறப்பட்டன. தண்டனைச் சட்டக்கோவைஇதன்போது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 486 பிரிவுகளின் கீழ் பாலியல் செயற்பாடு மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.எப்படியிருப்பினும், சம்பந்தப்பட்ட வீடியோ பெண்ணின் விருப்பத்தின் பேரில் அவரது சொந்த கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் முறைப்பாட்டாளரான பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

