இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 63,835 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவின் பதில் பணிப்பாளர்…
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 63,835 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை அழித்து, நோய் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

