இலங்கையில் GovPay போன்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தளங்களைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இவ்வாறான போலியான தளங்கள் மற்றும் செய்திகள் மூலம் பொதுமக்களின் பணம் மோசடி செ…

இலங்கையில் GovPay போன்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தளங்களைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான போலியான தளங்கள் மற்றும் செய்திகள் மூலம் பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் GovPay தளத்தைப் போலவே போலியான இணையதளங்களை மோசடி கும்பல்கள் உருவாக்கியுள்ளன.

இவ்வாறான தளங்கள் மூலம் வாகனப் போக்குவரத்து அபராதங்களை செலுத்துமாறு மக்களை ஏமாற்றியுள்ளனர்.

போலி போக்குவரத்து அபராதங்கள் மேலும், இலங்கை பொலிஸாரின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி, வாகன உரிமையாளர்கள் ஏதோ ஒரு போக்குவரத்து குற்றத்தைச் செய்துள்ளனர். அபராதத்தை உடனே செலுத்துமாறும் கூறி, போலியான இணைய இணைப்புகளை வழங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து அபராதங்கள் பொதுவாக அந்த இடத்திலேயே வாகன ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கப்பட்டதன் பின்னரே வழங்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு கமராக்கள் மூலம் குற்றங்கள் கண்டறியப்பட்டாலும், பொலிஸார் ஒருபோதும் குறுஞ்செய்தி மூலம் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை.

அத்துடன் அதிகாரப்பூர்வமற்ற இணைய இணைப்புகள் மூலம் அபராதத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்துவதில் இல்லை எனவும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே, இது போன்ற சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகள் அல்லது இணையதளங்கள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வித பணப்பரிமாற்றத்தைச் செய்யும் முன்பும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.