இலங்கை மக்களுக்கு பொலிஸார் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.சட்டபூர்வமான வருமான வழி இல்லாமல், திடீரென அதிகளவிலான சொத்துக்களையும் ஆடம்பரமான வாழ்க்கை முறையையும் கொண்டிருக்கும் நபர்கள் குறித்து இலங்கைப் பொலிஸாரும் குற்றவியல் விசாரணைத் திணைக்களமும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது…

இலங்கை மக்களுக்கு பொலிஸார்  அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.சட்டபூர்வமான வருமான வழி இல்லாமல், திடீரென அதிகளவிலான சொத்துக்களையும் ஆடம்பரமான வாழ்க்கை முறையையும் கொண்டிருக்கும் நபர்கள் குறித்து இலங்கைப் பொலிஸாரும் குற்றவியல் விசாரணைத் திணைக்களமும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட சொத்துகள் மற்றும் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைகள் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.