இலங்கை மத்திய வங்கிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை ஒகஸ்ட் 5ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது. திறைசேரி கடன் திருப்பிச்…

இலங்கை மத்திய வங்கிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை ஒகஸ்ட் 5ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.

திறைசேரி கடன் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையின் போது இந்த நிதி மோசடியாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.டொலர் மோசடி இந்த வழக்கு நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையுடன் தொடர்புடைய 16 டெராபைட் கணினி தரவுகள் மேலதிக ஆய்விற்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றின் ஆய்வறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பான அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கைகளும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் சிஐடியினர் குறிப்பிட்டுள்ளனர்.

இரு தரப்பினரின் விளக்கங்களையும் பரிசீலித்த நீதவான் பசன் அமரசேன, விசாரணையின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஒகஸ்ட் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.