இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி ஒன்றிலிருந்து இரண்டு விமானப்படை வீரர்கள் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.குறித்த சம்வமானது நேற்றையதினம்(9.7.2026) இடம்பெற்றுள்ளது. ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியொன்றின் போது ஏற்பட்ட விபத்திலேயே குறித்த இரண்டு விமானப்ப…
இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி ஒன்றிலிருந்து இரண்டு விமானப்படை வீரர்கள் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.குறித்த சம்வமானது நேற்றையதினம்(9.7.2026) இடம்பெற்றுள்ளது.
ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியொன்றின் போது ஏற்பட்ட விபத்திலேயே குறித்த இரண்டு விமானப்படை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைஇதனையடுத்து நேற்று மாலை, கயிற்றின் உதவியுடன் உலங்குவானூர்தியிலிருந்து இறங்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்த இரண்டு விமானப்படை வீரர்களும் உடனடியாக பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விமானப்படை மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

