காரைக்காலில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட நான்கு ஐம்பொன் சாமி சிலைகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐம்பொன் சாமி சிலைகள் வீட்டொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனை மேற்கொண்டன…

காரைக்காலில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட நான்கு ஐம்பொன் சாமி சிலைகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐம்பொன் சாமி சிலைகள் வீட்டொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, கோவிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டதுடன், தர்மபுரத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்களா, மேலும் வேறு சிலைகளும் இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.