2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இந்த ஆண்டின் இத…

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் ஊடாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு செலாவணி வருமானம் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையில் பதிவாகி வரும் இந்த வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2026 ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கையையும் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க வெளியிட்டார்.