சமகாலத்தில் இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளின் நாளாந்த செலவு மிகவும் குறைந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாளொன்றுக்கு 148 டொலர்களை மட்டுமே செலவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ள…

சமகாலத்தில் இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளின் நாளாந்த செலவு மிகவும் குறைந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாளொன்றுக்கு 148 டொலர்களை மட்டுமே செலவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018 - 2019 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நாள் ஒன்றுக்கு 171 டொலர்களை செலவு செய்த நிலையில் தற்போது அந்தளவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சுற்றுலாப் பயணிகள்148 டொலர் என்பது நேற்று நிலவரத்திற்கமைய, இலங்கை நாணய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாயாகும். களுத்துறை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் செலவிடும் டொலர் தொகையை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஒரு டொலரின் பெறுமதி இலங்கை ரூபாயில் 160 முதல் 180 ரூபாய் வரை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.