நீர்கொழும்பு சிறைச்சாலைகள் ஏற்பட்ட பாரிய வன்முறை சம்பவம் இலங்கையை மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது. சிறைக்கைதிகளுக்கும், பொலிஸாருக்கும் இடையில் நேருக்கு நேர்ந்த நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிற…

நீர்கொழும்பு சிறைச்சாலைகள் ஏற்பட்ட பாரிய வன்முறை சம்பவம் இலங்கையை மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.

சிறைக்கைதிகளுக்கும், பொலிஸாருக்கும் இடையில் நேருக்கு நேர்ந்த நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவங்களுக்கான ஆரம்ப புள்ளியாக சிறைச்சாலைக்குள் பணியாற்றிய பொலிஸாரே உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

வன்முறை சம்பவங்கள்கைதிகள் முன்னிலையில் எச்சரிக்கும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்ட கருத்துக்களே வன்முறை சம்பவங்கள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக பிரபல ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித்தவுடனான நேர்காணலின் போது இந்த அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

“நீர்கொழும்பு சிறைச்சாலை போதைப்பொருள் இல்லாத இடமாக மாற்றப்பட்டிருந்தது. இதை முன்னின்று நடத்திய சிறைச்சாலை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். சிறைக்குள் போதைப்பொருள் வர்த்தகம் செய்தவர்களான சுரேஷ் மற்றும் புருமுனாவின் ஆதாரவாளர்கள், ஐந்தாம் திகதி அதிகாரிகளை விசுவாசமாக செயற்பட்டு காட்டிக் கொடுத்த கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதால் முதல் கலவரம் ஏற்பட்டது.

அடுத்த நாளான 6ஆம் திகதி ஏற்பட்ட கலவரம் முற்றிலும் வேறானது. கலவரத்திற்கு பின்னர் அடுத்த நாள் சிறைச்சாலைக்கு வந்த அதிகாரிகள் கைதிகளை மிரட்டியுள்ளனர். நீர் விநியோகத்தை நிறுத்தி, ஒரு மாதத்திற்கு குடும்ப உறவினர்கள் பார்வையிட வர முடியாத வகையில் செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறு கூறியதால் கைதிகள் மத்தியில் ஆத்திரம் ஏற்பட்டு, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மீது தாக்குதல்தாக்குதலையடுத்து கண்ணீர்ப்புகை குண்டு அல்லது ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக துப்பாக்கி தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு அனுமதி வழங்கியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை தேவை.

இது சிறைச்சாலை அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்த சம்பவமாகும்” என கீர்த்தி ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.இந்த வன்முறை சம்பவத்தில் எட்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். கைதிகளின் ஆக்ரோஷமான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், அதனை மேற்கொள்ளாம் இருந்திருந்தால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதல் நாள் வன்முறை சம்பவத்தை அடுத்து ஆபத்தான கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றியிருந்தால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது என்றும், சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடே இதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.