இலங்கையில் தற்போது 454 நபர்களுக்கு முக்கிய பிரமுகர்களுக்கான விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்ட ஒரு அறிக்கை மூலம் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.454 நபர்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்புமுன்னாள் நாடாளுமன்ற உறு…

இலங்கையில் தற்போது 454 நபர்களுக்கு முக்கிய பிரமுகர்களுக்கான விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்ட ஒரு அறிக்கை மூலம் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.454 நபர்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்புமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பொலிஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மதத் தலைவர்கள் மற்றும் ஒரு முன்னாள் முதல் பெண்மணி உட்பட பல்வேறு தரப்பட்ட 454 நபர்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் விதமாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறித்த விபரங்கள் உள்ளடங்கிய பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.சம்பந்தப்பட்ட நபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து நடத்தப்பட்ட அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  பட்டியல் வெளியீடுஇந்தப் பட்டியலின்படி, பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள சில முக்கிய நபர்கள் பின்வருமாறு,முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விநாயகமூர்த்தி முரளிதரன் , டக்ளஸ் தேவானந்தா, சரத் பொன்சேகா மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோருக்கும், முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித் ஜயசுந்தர, தேசபந்து தென்னக்கோன் மற்றும் என். கே. இளங்கக்கோன் ஆகியோருக்கும் தற்போதைக்கு வரை விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் அனுராதபுரம், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள விகாரைகளின் பிரதம தேரர்கள், கண்டியின் கத்தோலிக்க ஆயர் மற்றும் செண்ட்ரல் பினான்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினரொருவருக்கும் இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  தற்போதைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவன் விஜேவீர, டபிள்யூ. எச். எம். தர்மசேன, அஜித் சாந்த பிரியதர்ஷன, எரங்க சுபசிங்க, சரத் குமார மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் விடேச பொலிஸ் பாதுகாப்பு பெறுபவர்களில் உள்ளடங்கியுள்ளனர்.  ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள், மகாநாயக்க தேரர்கள், இராஜதந்திரிகள் மற்றும் நீதித்துறை பிரமுகர்கள் ஆகியோருடன் சேர்த்து, இந்தக் குழுவினருக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் இலங்கையில் தற்போதைக்கு 454 நபர்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.