இலங்கையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து உயர் ரக சொகுசு வாகனங்களும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் எனத் தெரியவந்துள்ளது. அதற்கமைய, ரோல்ஸ் ரோய்ஸ் கல்லினன் - 4, பென்ட்லி - 15, லம்போர்கினி - 2, பெராரி - 5, மசெராட்டி - 1 ஆகிய வாகனங்கள் பய…

இலங்கையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து உயர் ரக சொகுசு வாகனங்களும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் எனத் தெரியவந்துள்ளது. அதற்கமைய, ரோல்ஸ் ரோய்ஸ் கல்லினன் - 4, பென்ட்லி - 15, லம்போர்கினி - 2, பெராரி - 5, மசெராட்டி - 1 ஆகிய வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களாகவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. புதிய வாகனங்களுடன் ஒப்பிடுகையில், பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் 15 சதவீத வரிச் சலுகை வழங்கப்படுகின்றது.இறக்குமதியில் பாரிய மோசடிஇந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்காகவே, இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டவையாக காட்டி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இறக்குமதி திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அதிக விலையுயர்ந்த சொகுசு வாகனங்களை கூட வரிச் சலுகைகளைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களாக நாட்டிற்கு இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்தில் இலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர்கள் இருவர் பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.