இலங்கையின் பங்கு மற்றும் அரசாங்கக் கடன் பத்திரச் சந்தைகளிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் போக்கு அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்துச் சென்றதால், இந்த ஆண்டுக்க…

இலங்கையின் பங்கு மற்றும் அரசாங்கக் கடன் பத்திரச் சந்தைகளிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் போக்கு அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்துச் சென்றதால், இந்த ஆண்டுக்கான மொத்த நிகர வெளிநாட்டு மூலதன வெளியேற்றம் தற்போது 30 பில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது.

கொழும்புப் பங்குச் சந்தையிலிருந்து இந்த ஆண்டு இதுவரை (ஆண்டுத் தொடக்கத்திலிருந்து) நிகர வெளிநாட்டு வெளியேற்றம் 25 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.முதலீடுதொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விற்பனைச் சரிவு காரணமாக பங்குச் சந்தையின் வேகம் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் பிணைமுறிப்பத்திரங்களிலிருந்து நிகரமாக 13.9 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் (அல்லது 5 பில்லியன் ரூபாவுக்கும் மேல்) அதிகமான தொகையை விற்றுள்ளனர்.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், டொலரின் மதிப்பைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இயல்பாகவே தங்கள் பங்குகளை விற்று வருகின்றனர். உலகளாவிய அரசியல் அமைதியின்மை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை முடிவுகள் காரணமாக, சர்வதேச நிதி முதலீட்டாளர்கள் பலவீனமான சந்தைகளிலிருந்து விலகி, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்வதும் இதற்கு ஒரு காரணமாகும் என்று தெரிய வந்துள்ளது.