பண்டாரவளை, எல்லதோட்ட பிரதேசத்தில் இயங்கி வந்த ஸ்பா நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ஸ்பா நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் பாலியல் செயல்பாடுகளை இரகசியமாக வீடியோ எடுத்து இணையம் ஊடாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் உட்பட ஒரு குழுவினரைக் கைது ச…

பண்டாரவளை, எல்லதோட்ட பிரதேசத்தில் இயங்கி வந்த ஸ்பா நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

ஸ்பா நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் பாலியல் செயல்பாடுகளை இரகசியமாக வீடியோ எடுத்து இணையம் ஊடாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் உட்பட ஒரு குழுவினரைக் கைது செய்துள்ளனர்.

வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரும், மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருமே இந்த மோசடியின் பிரதான சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாலியல் செயல்பாடுஸ்பா நிலைய அறைகளுக்குள் மிகவும் நுணுக்கமாகப் பொருத்தப்பட்ட கமராக்களின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் பாலியல் செயல்பாடுகளை இந்த தம்பதி வீடியோ எடுத்துள்ளனர். அந்தத் காட்சிகளைத் தமது கைபேசிகளில் சேமித்து வைத்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணத்திற்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணைப் பொறுத்து, 4,000 முதல் 8,000 ரூபாய் வரை கட்டணம் அறவிடப்படுகின்றது. இந்த நடவடிக்கையும் வீடியோ மோசடியும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபரான தம்பதியினருடன் இருந்த ஜா-எல, மினுவாங்கொடை, மாத்தளை மற்றும் வெலிமடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் மற்றும் மற்றொரு நபர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவப் பரிசோதனைகைது செய்யப்பட்டவர்கள் பாலியல் நோய் தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகள் மேலதிக விசாரணைக்காக கணினி குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. பண்டாரவளை விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த குணதிலக தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதற்காக, பொலிஸார் அந்த ஸ்பா நிலையத்தில் சேவை பெறுபவர் போன்று வேடமிட்ட ஒரு உளவாளியின் உதவியைப் பெற்றுள்ளார்.